தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி, விண்ணப்பப் பதிவுகள் அண்மையில் நிறைவடைந்தன.இதனைத் தொடர்ந்து, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தேதிகள் முறைப்படி அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்சூழலில், வரும் ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.இத்தேர்வெழுத விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket) தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி,
இணையதள பக்கத்திலிருந்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களின் முகவரி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்வு நெருங்கி வருவதால், விண்ணப்பதாரர்கள் தங்களை முழு வீச்சில் தயாரித்து வருகின்றனர்…

