Saturday, July 18, 2026

“கேப்டன் மில்லர்” படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது அறிவிப்பு..!!

இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான தனுஷுக்கு, இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்காக இந்த விருது தனுஷுக்கு வழங்கப்படவுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷ், தனது அசாத்தியமான மற்றும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும், விமர்சகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். பிரிட்டிஷ் காலகட்ட பின்னணியில் உருவான இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தில், அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.இதன் விளைவாக, சிறந்த நடிகருக்கான பிரிவில் (சிறப்பு விருது – Special Award) தனுஷின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தனுஷின் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘ஆடுகளம்’ மற்றும் ‘அசுரன்’ ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை தனுஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News