Monday, March 2, 2026
No menu items!

விவசாயிகளுக்கு குட் நியூஸ் ..!! டிராக்டர் வாங்க 50% மானியம் – விண்ணப்பிப்பது எப்படி.??

விவசாயத்தை லாபகரமானதாக மாற்றவும், விவசாயிகளின் பணிச்சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு ‘வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டம்’ மூலம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், களையெடுக்கும் கருவிகள் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.

குறிப்பாக 2.5 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு இந்த 50 சதவீத மானியச் சலுகை பொருந்தும். உதாரணமாக ரூ.50,000 மதிப்புள்ள கருவிக்கு ரூ.25,000 அரசே வழங்கும். மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதமும்,

இயந்திர வாடகை மையங்கள் அமைக்க 80 சதவீதமும் மானியம் உண்டு.விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார், சிட்டா, பட்டா மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களுடன் ‘உழவன்’ (Uzhavan) செயலி மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News