உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், பஞ்சபூத தலங்களில் ‘ஆகாய’ (விண்) தலமாக விளங்குகிறது. இங்குள்ள கட்டிடக்கலையானது அறிவியலும் ஆன்மீகமும் கலந்த ஒரு அதிசயமாகும். மனித உடலில் 9 துவாரங்கள் இருப்பதைப்போல, இக்கோவிலுக்கு 9 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, மனிதன் ஒரு நாளைக்குச் சராசரியாக 21,600 முறை சுவாசிப்பதை உணர்த்தும் வகையில், மூலவர் விமானத்தின் பொற்கூரையில் 21,600 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
அவற்றை இணைக்கப் பயன்படுத்தப்பட்ட 72,000 தங்க ஆணிகள், மனித உடலில் ஓடும் 72,000 நாடிகளை குறிக்கின்றன. இது வெறும் கோவில் மட்டுமல்ல, மனித உடலின் ஆன்மீக வரைபடம் என்றே போற்றப்படுகிறது.இங்குள்ள புகழ்பெற்ற “சிதம்பர ரகசியம்” என்பது நடராஜர் சன்னதிக்கு வலதுபுறம் உள்ள நீலத் திரைக்குப் பின்னால் உள்ளது. திரையை விலக்கினால் சிலைகள் ஏதுமின்றி,
வெறும் தங்க வில்வ மாலை மட்டுமே தொங்கும். “இறைவன் உருவமற்றவன், எங்கும் நிறைந்திருப்பவன்” என்ற ஆகாய தத்துவத்தை இந்த வெட்டவெளி உணர்த்துகிறது. உருவம், பெயர் எல்லாம் அழியும், ஆனால் பரம்பொருள் ஒன்றே நிரந்தரம் என்பதே இந்த ரகசியத்தின் மெய்ஞானமாகும்…

