உலகம் அழிந்துவிட்டதாக கருதி அல்லது ஒரு பேரழிவில் இருந்து தப்பிக்க, பல தலைமுறைகளாக சுரங்கத்திற்குள் வாழ்ந்த ஒரு மனித இனம், மீண்டும் பூமிக்குத் திரும்பினால் எப்படி இருக்கும்? இந்த கற்பனைக்கு உயிரூட்டும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. பரப்பப்படும் அந்த வீடியோவில்,
இருண்ட, ஆழமான சுரங்கம் போன்ற ஒரு பகுதியிலிருந்து மக்கள் மெல்ல மேலேறி வருகின்றனர். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் மிகவும் பழையதாகவும், கிழிந்த நிலையிலும் உள்ளன. ஒரு நீண்ட குகைப் பாதையைக்
கடந்து அவர்கள் மேலே வந்தவுடன், பிரகாசமான சூரிய ஒளியைக் காண்கின்றனர். முதன்முறையாக வானத்தையும், பசுமையான நிலப்பரப்பையும் காணும் அவர்களது முகத்தில் ஆச்சரியமும், ஆனந்தமும், ஒருவித பயமும் கலந்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. குறிப்பாக, அந்த வெளிச்சத்தைக் கண்டு
அவர்கள் கண்கள் கூசுவதும், காற்றை சுவாசிக்கும் விதமும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. 146 ஆண்டுகால இருள்: இந்த வீடியோவுடன் பகிரப்படும் தகவலின்படி, இவர்கள் சுமார் 146 ஆண்டுகளாக பூமிக்கடியில் வாழ்ந்ததாகவும்,
பல தலைமுறைகளுக்குப் பிறகு இப்போதுதான் வெளிுலகிற்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. “சூரியன் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை, முதன்முறையாக அதை சந்திக்கும் தருணம்” என நெட்டிசன்கள்
இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையான சம்பவமா அல்லது திரைப்படக் காட்சியா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, “சுதந்திரத்தின் அருமையையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும்” இந்த வீடியோ உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
