நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை ஒத்திவைத்தது.இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்துத் தணிக்கை வாரியம் (Censor Board) தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.விசாரணையின் போது, சென்சார் போர்டு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை மிகத் தீவிரமாக முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த நீதிபதிகள்,
வழக்கின் விசாரணையை முடித்து வைப்பதாகவும், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும் (Judgment Reserved) உத்தரவிட்டனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், படம் திட்டமிட்டபடி வெளியாவதில் நீடிக்கும் மர்மம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
