Home செய்திகள் எடை குறைய யூடியூப் டிப்ஸ் ..!! வெங்காரம் சாப்பிட்ட மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

எடை குறைய யூடியூப் டிப்ஸ் ..!! வெங்காரம் சாப்பிட்ட மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு மதுரையில் ஒரு சோக சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப் வீடியோவைப் பார்த்து, நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருளை உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.உயிரிழந்தவர் மதுரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கலையரசி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, யூடியூபில் வந்த வீடியோ ஒன்றைப் பார்த்து ‘வெங்காரம்’ (Borax) என்ற பொருளைச் சாப்பிட்டால் எடை குறையும் என நம்பியுள்ளார்.உண்மையில், இந்த வெங்காரம் என்பது குங்குமம் தயாரிப்பதற்கும், உலோகங்களைச் சுத்திகரிப்பதற்கும் பயன்படும் ஒரு வகை வேதிப்பொருளாகும். இதன் ஆபத்தை அறியாத மாணவி அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், வேதிப்பொருளின் பாதிப்பு அதிகமானதால், சிகிச்சை பலனின்றி அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இணையத்தில் வரும் போலி மருத்துவக் குறிப்புகளை நம்பி உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்…

Exit mobile version