Home லைப் ஸ்டைல் நரை முடியை கருப்பாக்கும் மேஜிக் எண்ணெய் – செய்முறை விளக்கம் உள்ளே..!!

நரை முடியை கருப்பாக்கும் மேஜிக் எண்ணெய் – செய்முறை விளக்கம் உள்ளே..!!

இன்றைய சூழலில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை இளநரை. இதற்கு ரசாயனப் பூச்சுகளைப் பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கை எண்ணெய் சிறந்த தீர்வாக அமைகிறது.இதற்கு ஒரு கப் கடுகு எண்ணெய், தலா ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் பொடி மட்டுமே தேவை. ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கி, அதில் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் பொடியைச் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் நிறம் மாறும் வரை காய்ச்சி, பின் அடுப்பை அணைத்து ஆறவிட்டு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.தலைக்குக் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவி 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். வாரம் மூன்று முறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால், நரைமுடி மறைந்து முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று அழகுக்கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்…

Exit mobile version