இந்துக்களின் புனிதத் திருநாளான மகாசிவராத்திரி விழா, வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய இரவாகவும், அன்னை பார்வதியை மணந்த நன்னாளாகவும் இது போற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5.04 மணிக்குத் துவங்கும் சதுர்த்தசி திதி, மறுநாள் மாலை வரை நீடிக்கிறது.சிவராத்திரி அன்று விரதமிருந்து விடிய விடிய கண்விழித்து ஈசனை வழிபட்டால் வினைகள் தீரும் என்பது ஐதீகம்.
குறிப்பாக, பிப்ரவரி 15 மாலை 6.11 மணி முதல் மறுநாள் காலை 6.59 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் நள்ளிரவு 11.55 முதல் 12.56 வரை நடைபெறும் ‘நிஷித கால பூஜை’ மிகச் சிறப்பானதாகும்.இரவு முழுவதும் “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை உச்சரித்து, வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்தது.
விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 16-ம் தேதி காலை 6.42 மணி முதல் பகல் 3.10 மணிக்குள் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள், மூன்றாம் கால பூஜையிலாவது (அதிகாலை 12.36 – 3.47) விழித்திருந்து வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
