தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் கட்சியில் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் விரைவில் விலக உள்ளதாகவும் வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்து செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“புரட்சித்தலைவர் மற்றும் அம்மா வழியில் வந்த என்னை, சோதனையான காலத்தில் அரவணைத்து கரம் பிடித்தவர் தளபதி விஜய். 2026 தேர்தலில் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் வரை நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றுவோம்,” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.மேலும், தன்னைப் பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என்றும்,
அடிப்படை ஆதாரமற்ற இத்தகைய செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு அழகல்ல என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தவறான வதந்திகளைப் பரப்பிய ஊடகங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் கட்சி மாறுவதாகக் கூறப்பட்ட யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
