சமீபகாலமாக, உணவு மற்றும் மளிகைப் பொருட்களை 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வதாகக் கூறி, பல நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. இந்த நேரக் கட்டுப்பாட்டிற்குள் பொருட்களைக் கொண்டு
சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் டெலிவரி ஊழியர்களுக்கு (Delivery Partners) கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களைச் சாலைகளில் அபாயகரமான வேகத்தில் செல்லத் தூண்டுகிறது.
இதனால் விபத்துகள் அதிகரிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்துப் போக்குவரத்துத் துறை மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் நேரம், போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் இருக்க வேண்டும். 10 நிமிடங்களில் டெலிவரி” என்று விளம்பரப்படுத்தி,
ஊழியர்களை ஆபத்தான வேகத்தில் வாகனம் ஓட்டக் கட்டாயப்படுத்தக் கூடாது. டெலிவரி ஊழியர்களுக்கான பணிப் பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்…

