Monday, March 2, 2026
No menu items!

ஆளுநர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ், விசிக..!! காரணம் என்ன.??

குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ராஜ்பவனில் வழங்கவிருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகத் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. காங்கிரஸ், இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட் கட்சிகள்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவை இந்த முடிவை எடுத்துள்ளன.ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராகவும்,

இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாகவும் செயல்பட்டு வருவதாக இக்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆளுநரின் இத்தகைய போக்கைக் கண்டிக்கும் விதமாகவே, அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று கூட்டணிக் கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே சட்டப்பேரவையில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், தற்போது கூட்டணிக் கட்சிகளின் இந்த ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு முடிவு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News