Monday, March 2, 2026
No menu items!

எதிர்மறை ஆற்றல் நீங்க…!! சாதாரண சாம்பிராணியை விட சிறந்தது எது.??

பொதுவாக வீடுகளில் பூஜை என்றாலே சாம்பிராணி போடுவது வழக்கம். ஆனால், அதைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது சித்தர்கள் அருளிய ‘தசாங்க தூபம்’. ‘தசம்’ என்றால் பத்து; வெட்டிவேர், சந்தனத்தூள், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால், வெள்ளை குங்குலியம், நாட்டுச் சர்க்கரை, திருவட்ட பச்சை, சாம்பிராணி மற்றும் கீச்சிலி கிழங்கு ஆகிய 10 அரிய மூலிகைகள் கலந்த கலவையே இது.

இதை வீட்டில் ஏற்றுவதால் மன அழுத்தம் குறைந்து, கோவில் கருவறையில் இருக்கும் தெய்வீக நறுமணத்தை வீட்டிற்குள் கொண்டுவரும். முக்கியமாக, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி ஆகியவற்றை விரட்டி, நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் சக்தி இதற்கு உண்டு.தினசரி பூஜையில் தசாங்கம் பயன்படுத்துவது குடும்ப ஒற்றுமையையும்,

ஐஸ்வர்யத்தையும் பெருக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. இதன் புகை உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதால், பாரம்பரியமாக ஆலயங்களிலும் இல்லங்களிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூபம் முடிந்த பின் கிடைக்கும் சாம்பலைக் கூட செடிகளுக்கு உரமாக இடலாம்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News