Monday, March 2, 2026
No menu items!

ஜனநாயகன் பட வழக்கு..!! தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு மற்றும் தணிக்கை சான்றிதழ் (Censor Certificate)

நடைமுறைகள் குறித்து தலைமை நீதிபதி மற்றும் தயாரிப்பு நிறுவனத் தரப்பு வழக்கறிஞர் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி,

படத்தயாரிப்பு நிறுவனத்தை நோக்கி முக்கியக் கேள்வி ஒன்றை எழுப்பினார். “ஒரு திரைப்படம் முழுக்க முழுக்க வணிக நோக்கில் எடுக்கப்படும்போது, தணிக்கைத்துறையின் சென்சார் சான்றிதழ் கையில் இல்லாமல்

தயாரிப்பாளர்கள் எப்படி படத்தின் வெளியீட்டு தேதியை முன்கூட்டியே அறிவிக்க முடியும்?” என்று வினவினார். இதற்கு KVN தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன் பதிலளிக்கையில்,

நடைமுறையில் உள்ள சினிமாத்துறை வழக்கத்தை சுட்டிக்காட்டினார். “எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகு வெளியீட்டு தேதியை அறிவிப்பதில்லை,” என்று

அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே தேதிகள் அறிவிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த கேள்வி திரைத்துறையில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News