மும்பை இந்தியன்ஸ் (MI) மகளிர் அணியில் காயம் காரணமாகத் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் விளையாடி வந்த வீராங்கனை கமலினி, காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.இதனையடுத்து, அவருக்குப் பதிலாக இளம் வீராங்கனை வைஷ்ணவி ஷர்மாவை அணியில் சேர்ப்பதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“வெல்கம் ஹோம் பப்பி மா” (Welcome Home Puppy Ma) எனத் தலைப்பிட்டு அவரை அணி நிர்வாகம் வரவேற்றுள்ளது.வைஷ்ணவி ஷர்மா சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தனது அசாத்தியமான பந்துவீச்சின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
கமலினியின் விலகல் அணிக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், வைஷ்ணவியின் வருகை அணிக்கு புது ரத்தம் பாய்ச்சும் என எதிர்பார்க்கப்படுகிறது…

