Monday, March 2, 2026
No menu items!

மயக்கப் பொடி தூவி நகையை பறிக்க முயன்ற கொள்ளையன் கைது..!! தப்பிய இளம் பெண்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இன்று மதியம் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென அப்பெண்ணின் முகத்தில் ஒருவிதப் பொடியைத் தூவியுள்ளார்.

இதில் நிலைகுலைந்த அந்தப் பெண் மயக்கமடையத் தொடங்கியுள்ளார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகைகளைப் பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் அபயக்குரல் எழுப்பவே,

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர் போலீசார் விசாரணை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி நகர காவல்துறையினர், பிடிபட்ட நபரை காவல் நிலையம்

அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மயக்கப் பொடி மற்றும் சில உபகரணங்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இது போன்ற துணிச்சலான கொள்ளை முயற்சி நடந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News