Monday, March 2, 2026
No menu items!

27 ஆண்டுகள்.. 608 நாட்கள்.. நாசாவையே கலக்கிய சுனிதா வில்லியம்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென தனி முத்திரை பதித்த இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால நாசா (NASA) பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் கடந்த 27 ஆண்டுகளாகப் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளித் துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக, மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தவர் என்ற பெருமையும், 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடைபயணம் (Spacewalk) மேற்கொண்டவர் என்ற சாதனையும் இவருக்கு உண்டு.

தற்போது 60 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ், தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், விண்வெளி தொடர்பான கருத்தரங்குகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

அவரது இந்த ஓய்வு அறிவிப்பு விண்வெளி ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விண்வெளி சகாப்தம் முடிவுக்கு வந்தாலும், அவரது சாதனைகள் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News