Monday, March 2, 2026
No menu items!

ஜனவரி 23 நடக்கப்போகும் அந்த சம்பவம்! மோடி முன்னிலையில் இணையப்போகும் தலைவர்கள் யார் யார்?

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தேமுதிக (DMDK) மற்றும் அமமுக (AMMK) ஆகிய கட்சிகளை இந்தக் கூட்டணியில் இணைப்பதற்கான முக்கியப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறுகின்றன.

இதற்காக, பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் இன்று சென்னை வருகை தந்துள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிடிவி தினகரன் முடிவு என்ன? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவது தொடர்பான தனது இறுதி முடிவை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 23-ல் மாநாடு? கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து உறுதியாகும் பட்சத்தில், வரும் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News