Monday, March 2, 2026
No menu items!

ஆப்பிளை விட சிறந்தது கொய்யா.!! தினமும் ஒன்று சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்..!!

விலை மலிவாகவும், சத்துக்கள் நிறைவாகவும் கிடைக்கும் கொய்யாப்பழம், ஆப்பிளை விட அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ‘சி’ சத்துக்களைக் கொண்டுள்ளது. ஒரு கொய்யாப்பழம், 4 ஆரஞ்சு மற்றும் 10 எலுமிச்சைப் பழங்களுக்கு இணையான சத்துக்களைத் தருவது பலரும் அறியாத உண்மை. இதில் பிங்க் மற்றும் வெள்ளை என இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.இரத்த சோகை உள்ளவர்களுக்கு பிங்க் நிற கொய்யா சிறந்தது;

இது இரும்புச்சத்தை ஈர்க்க உதவி, இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது. அதேவேளையில், இனிப்பு குறைவான வெள்ளை கொய்யா, சர்க்கரை நோய் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்தது.தினசரி ஒரு கொய்யா உண்பதால், இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தைக் காக்கிறது.

மேலும், இது மலச்சிக்கலைத் தீர்ப்பதுடன், வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்கவும் இந்த எளிய பழம் பெரிதும் உதவுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News