Monday, March 2, 2026
No menu items!

அமிதாப் பச்சன் வீட்டில் தங்க டாய்லெட்..?? உண்மையை உடைத்த நடிகர் ..!!

இந்தியத் திரையுலகின் ‘ஷாஹேன்ஷா’ என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், 80 வயதைக் கடந்தும் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்கள் எனத் தொடர்ந்து பிஸியாக இயங்கி வருகிறார். சுமார் 1600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் பெரும் பணக்கார நடிகர்களில் ஒருவராகத் திகழும் இவரின் குடும்பமே நட்சத்திரக் குடும்பமாகும். மனைவி ஜெயா பச்சன் எம்.பியாகவும், மகன் அபிஷேக் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில், அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தால் ஆன கழிவறை (Golden Toilet) உள்ளதாக ஒரு தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் வர்மா, கடந்த 2016-ம் ஆண்டு அமிதாப் உடன் நடித்தபோது அவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு தங்கத்தில் டாய்லெட் இருப்பதைப் பார்த்து அவர் ஆச்சரியமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் விஜய் வர்மா பகிர்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிக முக்கிய நடிகரின் வீட்டில் உள்ள இந்த ஆடம்பர வசதி குறித்த புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News