Monday, March 2, 2026
No menu items!

சங்கரன் கோவிலில் வேலைவாய்ப்பு..!! 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 வரை சம்பளம்..!!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலில் காலியாக உள்ள காவலர் (Watchman) மற்றும் துப்புரவுப் பணியாளர் இடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, இறை நம்பிக்கை கொண்ட இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாகத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. ‘பாரா’ காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை https://hrce.tn.gov.in இணையதளத்திலோ ,

அல்லது கோவில் அலுவலகத்திலோ பெற்று, பூர்த்தி செய்து ஜனவரி 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News