கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “எனக்கு கதை சொல்ல வந்த 40 இயக்குநர்களின் கதையை கேட்டு நான் தூங்கிவிட்டேன்” என்று அஸ்வின் குமார் பேசியது
சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் கடுமையான ட்ரோல்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானார். மீண்டும் அதே கேள்வி இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப்
பிறகு அஸ்வின் குமார் தனது அடுத்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், பழைய சம்பவத்தை நினைவூட்டும் வகையில்,
“இப்பவும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா?” என்று நேரடியாகவே கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியைக் கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் சற்று திகைப்படைந்தாலும், அஸ்வின் குமார் சற்றும் கோபப்படாமல் மிக நிதானமாக அதை எதிர்கொண்டார்…
