பாரம்பரியம் மிக்க இந்தியாவில், அன்றாட வாழ்வில் பல நம்பிக்கைகள் சடங்குகளாகவே மாறிவிட்டன. கருப்பு பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்பது எகிப்தில் தொடங்கி, இங்கு சனி பகவானின் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளில் 101 என ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து அளிப்பது, உறவு பூஜ்ஜியத்தில் முடியாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே கடைப்பிடிக்கப்படுகிறது.மாலையில் வீட்டைப் பெருக்கினால் லட்சுமி வெளியேறுவாள் என்பது பயம்;
ஆனால், மின்சாரம் இல்லாத காலத்தில் இருட்டில் விலை உயர்ந்த பொருட்கள் குப்பையில் சேர்வதைத் தடுக்கவே இதைத் தடுத்தனர். அதேபோல், திருஷ்டி கழிக்கக் கட்டப்படும் எலுமிச்சை-மிளகாய், மூதேவியை வாசலோடு திருப்பி அனுப்பும் ஐதீகம் கொண்டது.கண் துடிப்பது சகுனமாகப் பார்க்கப்பட்டாலும், அது சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறியே என மருத்துவம் கூறுகிறது.
கண்ணாடி உடைந்தால் 7 வருட பீடை என்பது ரோமானியர் காலத்துப் பயம். இரவில் அரசமரத்தடியில் பேய் என்பது கட்டுக்கதை; உண்மையில் மரங்கள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு உடல்நலத்தைப் பாதிக்கும் என்பதே நிதர்சனம். இப்படி ஒவ்வொரு நம்பிக்கைக்குப் பின்னாலும் ஒரு வாழ்வியல் காரணம் ஒளிந்துள்ளது…
