விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சு கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. மேடையில் பேசிய அவர், திமுக அரசின் மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை விமர்சித்ததுடன், எடப்பாடி பழனிசாமி குறித்த புதியதொரு வாக்குறுதியையும் அளித்துள்ளார்.”திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டும் இலவசம் என அறிவித்து, ஒன்றாகப் பயணித்த குடும்பங்களைப் பிரித்துவிட்டனர். ஆனால், எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி குடும்பங்களைச் சேர்த்து வைப்பார்.
இனி ஆண்கள் தங்கள் மனைவி அல்லது காதலி என யாரை வேண்டுமானாலும் அழைத்துக்கொண்டு ஜோடியாக இலவசமாகப் பேருந்தில் செல்லலாம். சினிமா டிக்கெட் செலவு மட்டும் தான் உங்களுக்கு,” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.மேலும் பேசிய அவர், “ஏழை எளிய மக்களின் கஷ்டம் தெரிந்தவர் எடப்பாடியார்.
அவர்கள் எதை விரும்புகிறார்கள், எதைக் கொடுத்தால் துன்பம் நீங்கும் என்பது அவருக்குத் தெரியும். திமுக ஆட்சியைப் போல ஓட்டைப் பேருந்துகள் வராது; அதிமுக ஆட்சியில் பளபளக்கும் புதிய பேருந்துகள் வரும்,” என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பையும் சிரிப்பலையும் ஏற்படுத்தியது…
