Home விளையாட்டு இன்று தொடங்குகிறது இந்தியா – நியூசிலாந்து டி20 தொடர்..!! இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்..!!

இன்று தொடங்குகிறது இந்தியா – நியூசிலாந்து டி20 தொடர்..!! இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, இன்று தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பதிலடி கொடுக்கத் தயாராகியுள்ளது. நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு முதல் டி20 போட்டி நடைபெறவுள்ளது.இப்போட்டி குறித்துப் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “இஷான் கிஷன் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார்;

அவர் அணியின் முக்கியத் தேவையான 3-வது இடத்தில் களமிறங்குவார்,” என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்திய சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதாலும், உலகக் கோப்பைத் திட்டங்களில் அவர் இருப்பதாலும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பொதுவாக 3-வது இடத்தில் ஆடும் அதிரடி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பியிருந்தாலும்,

தற்போது அந்த இடம் இஷானுக்கு வழங்கப்பட்டுள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவனில் இடம்பெறுவது சந்தேகமே. நவம்பர் 2023-க்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பும் இஷான், இதுவரை 32 போட்டிகளில் 796 ரன்கள் குவித்துள்ளார்…

Exit mobile version