Home செய்திகள் தொடரும் அதிர்ச்சி..!! நேற்றைய உயர்வை மிஞ்சிய இன்றைய தங்கம் விலை..!!

தொடரும் அதிர்ச்சி..!! நேற்றைய உயர்வை மிஞ்சிய இன்றைய தங்கம் விலை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலை, இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.நேற்றைய தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்திருந்த நிலையில், இன்றும் விலை குறையாமல் மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,800 உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,14,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த அதிரடி விலை உயர்வு, இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் திருமண முகூர்த்த நாட்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்தோர் இந்தத் திடீர் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களே இந்தத் தொடர் விலை உயர்வுக்குக் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர். “தங்கம் விலை இப்படி உயர்ந்துகொண்டே சென்றால், சாமானியர்களால் இனி குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாது,” எனப் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்…

Exit mobile version