Monday, March 2, 2026
No menu items!

விஜய்யின் “ஜனநாயகன்” படத்திற்குச் சிக்கல்.!! ராணுவம், மத சர்ச்சை காரணமா..??

நடிகர் விஜய்யின் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரைக்கு வருவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. படத்தின் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதமே படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்த பிறகு இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். முதலாவதாக, படத்தில் இந்திய ராணுவம் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் கௌரவம் சார்ந்த விஷயம் என்பதால் தணிக்கைக் குழு இதில் கண்டிப்புடன் உள்ளது.இரண்டாவதாக, படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அல்லது வசனங்கள் மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த இரண்டு தீவிரமான காரணங்களால்தான் படத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் விளைவாக, ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது மறுஆய்வுக் குழுவின் (Revising Committee) பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்குழுவின் முழுமையான ஆய்விற்குப் பிறகே படத்தின் ரிலீஸ் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News