Home ஆன்மீகம் செய்வினை இருப்பதை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி..?? எளிய பரிசோதனை மற்றும் பரிகார முறைகள்..!!

செய்வினை இருப்பதை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி..?? எளிய பரிசோதனை மற்றும் பரிகார முறைகள்..!!

இன்றைய நவீன காலத்திலும் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் இருப்பதாகப் பலரும் நம்புகின்றனர். தொழில் முடக்கம், காரணமற்ற உடல்நலக்குறைவு, தொடர் மருத்துவச் செலவுகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் போன்றவை செய்வினை பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.இத்தகைய பாதிப்புகளை வீட்டிலேயே எளிய முறையில் உறுதி செய்துகொள்ளலாம். ஒரு மண்பானையில் இடப்பட்ட துளசி இலைகள் உடனடியாக வாடினாலோ,

அல்லது கோவிலில் வைத்து பூஜித்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட எலுமிச்சை பழம் ஒரு வாரத்தில் அழுகிப்போனாலோ வீட்டில் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம். மாறாக, எலுமிச்சை காய்ந்து போனால் பாதிப்பு இல்லை எனலாம்.இதற்குப் பரிகாரமாக, குளக்கரையில் குலதெய்வத்தை வேண்டி எலுமிச்சையைத் தலையைச் சுற்றி வீசலாம். தீவிர பாதிப்பு இருப்பின், தேய்பிறை செவ்வாய்க்கிழமையில் காளி தேவியை வழிபட வேண்டும்.

கருப்பு ஆடை அணிந்து, வடக்கு நோக்கி அமர்ந்து, “ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட்” என்ற மந்திரத்தை 1008 முறை ஜபித்து உரு ஏற்ற வேண்டும். பின்னர், பூஜிக்கப்பட்ட தேங்காயை பாதிக்கப்பட்டவரைச் சுற்றி தெற்கு திசையில் உடைத்து எரிப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் மற்றும் தீய சக்திகள் விலகும் என்று ஆன்மீக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன…

Exit mobile version