கேரளாவில் பேருந்து பயணத்தின் போது தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான வீடியோவை வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண்ணை கேரள போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.பேருந்து பயணத்தின் போது தீபக் என்பவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி, ஷிம்ஜிதா முஸ்தபா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், அவமானம் தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.ஒரு பொய்யான குற்றச்சாட்டால் தங்கள் மகன் பலியாகிவிட்டதாக தீபக்கின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கேரள போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணைத் தேடி வந்தனர். இந்நிலையில், வடகரை பகுதியில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதா முஸ்தபாவை போலீசார் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, இளைஞர் ஒருவரின் உயிரைப் பறித்த சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது…
