Monday, March 2, 2026
No menu items!

வடக்கில் நடக்கும் நில அபகரிப்பு மற்றும் குடியேற்றங்களின் பின்னணி என்ன.?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விதம் மாறவில்லை என்ற கடும் குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில், முன்னாள் ஜனாதிபதி

மகிந்த ராஜபக்சவின் நீண்டகால கனவான ‘வடக்கு சிங்களமயமாக்கல்’ திட்டம் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மாறாத கொள்கை, புதிய முகம் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவின்

ஆட்சிக்காலத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக வடக்கில் பல ஏக்கர் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட

நிலையில், தற்போதைய அநுர அரசாங்கமும் அதே அரச இயந்திரத்தைப் பயன்படுத்தி குடியேற்றத் திட்டங்களை துரிதப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறைமுகத் திட்டங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் எல்லைப் பகுதிகளில்

புதிய பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும், விவசாயத் திட்டங்கள் என்ற பெயரில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கும் இரகசிய முன்னெடுப்புகள் நடப்பதாகப் பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

“ஆட்சியாளர்கள் மாறினாலும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வடக்கில் திணிக்கும் அரச இயந்திரத்தின் செயல்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது,” எனத் தமிழ்த் தேசியப் பரப்பின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்…

 

Related Articles

Stay Connected

0FansLike

Latest News