Monday, March 2, 2026
No menu items!

இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் மெகா வர்த்தக ஒப்பந்தம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து மிகவும் உயர்வாகப் பேசியுள்ளார். பிரதமர் மோடி தனது நெருங்கிய நண்பர் என்றும்,

அவர் மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும் டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு குறித்துப் பேசிய அவர், இரு நாடுகளுக்கும்

இடையே விரைவில் ஒரு சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் (Trade Deal) ஏற்படவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தகத் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அரங்கில், குறிப்பாக உலகப் பொருளாதார மன்றத்தில், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து டிரம்ப் பேசியிருப்பது இரு நாட்டு உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News