Monday, March 2, 2026
No menu items!

கொடைக்கானல் நகராட்சிக்கு வனத்துறை.. குப்பைகளை அகற்ற 3 நாள் கெடு.. தவறினால் கடும் நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியானது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள சீராடுகானல்  வனப்பகுதியில், நகராட்சி நிர்வாகம் சேகரிக்கும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. வனப்பகுதிக்குள் இவ்வாறு குப்பைகளைத் தேக்கி வைப்பது

அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வனத்துறை அலுவலர்

அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “சீராடுகானல் வனப்பகுதியில் குவிந்து கிடக்கும் நகராட்சி குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதற்காக நகராட்சி நிர்வாகத்திற்கு 3 நாட்கள் காலக்கெடு விதிக்கப்படுகிறது. இந்த காலக்கெடுவிற்குள் குப்பைகள் அகற்றப்படாவிட்டால், கொடைக்கானல் நகராட்சி ஆணையர்

மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வனத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News