Monday, March 2, 2026
No menu items!

இன்று சந்திராஷ்டமம்..! இந்த ராசிக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும்..!! உங்கள் ராசி என்ன.?

உங்கள் 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ:

வியாழக்கிழமையான இன்று கும்ப ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்று சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், சிலருக்குக் கவனமும் தேவைப்படும் நாளாக உள்ளது.

  • மேஷம்: நீண்ட நாட்களாக நினைத்த காரியம் கைகூடும். ஆலய வழிபாட்டால் மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

  • ரிஷபம்: சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

  • மிதுனம்: நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகள் கைகூடும். ரியல் எஸ்டேட் சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

  • கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

  • சிம்மம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

  • கன்னி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் நாள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

  • துலாம்: தெளிவான திட்டமிடலால் வெற்றிகளை குவிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான சூழல் உருவாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

  • விருச்சிகம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

  • தனுசு: காலையிலேயே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மகரம்: புதிய முயற்சிகளுக்குப் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

  • கும்பம்: ராசியில் சந்திரன் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

  • மீனம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். திடீர் பணவரவு உண்டு. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News