தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டின.நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட புஸ்ஸி ஆனந்த், சின்னம் குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இது சாதாரண சின்னம் அல்ல; இதுதான் எங்களின் வெற்றிச் சின்னம்,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.மேலும் அவர் பேசுகையில், “எங்கள் தலைவர் விஜய் அவர்கள் இந்தச் சின்னத்தைப் பற்றி அறிவித்த அடுத்த நிமிடமே, ‘விசில் சின்னம்’ பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்துவிடும்,” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
விஜய்யின் அபரிமிதமான மக்கள் செல்வாக்கு காரணமாக, சின்னத்தை பிரபலப்படுத்துவது எளிதானது என்பதை அவரது பேச்சு உணர்த்தியது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது…

