பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் காலமானார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிறுவயதிலிருந்தே பாடுவதில் தீராத ஆர்வம் கொண்ட ஜானகி அம்மா, தனது 20-வது வயதில் சென்னை வந்து முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டார். ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட ஜாம்பவான்களின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் தன் குரலால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.தற்போது 87 வயதாகும் எஸ். ஜானகி, முதுமை காரணமாகப் பாடுவதை முழுமையாக நிறுத்திவிட்டு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், அவருடன் வசித்து வந்த அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா,
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.தாய் எஸ். ஜானகியைப் போலவே கலையுலகில் ஆர்வம் கொண்டிருந்த முரளி, சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மகனை இழந்து வாடும் ஜானகி அம்மாவுக்கு திரையுலக பிரபலங்களும், இசை ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்…

