ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா (Doda) மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் தோடா மலைப்பாதையில் ராணுவ வாகனம் ஒன்று 17 வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. வாகனம் மலைப்பாதையில் பயணித்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
கடும் சரிவில் உருண்டு விழுந்ததில் வாகனம் முழுவதுமாக உருக்குலைந்தது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், விபத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்திலேயே 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்ற வீரர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரர்களுக்குத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்…
