Home சினிமா வீர வல்லாள தேவன் சர்ச்சை..!! “திரௌபதி 2” வெளியீட்டில் சிக்கலா.?? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

வீர வல்லாள தேவன் சர்ச்சை..!! “திரௌபதி 2” வெளியீட்டில் சிக்கலா.?? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் நாளை (ஜனவரி 23) திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த மகாமுகி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.திருவண்ணாமலை பகுதியை 14-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் வீர வல்லாள தேவனின் வரலாற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மன்னர் வீர வல்லாள தேவன் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ள நிலையில்,

இப்படத்தில் அவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராகச் சித்தரித்துள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

படத்திற்கு ஏற்கனவே மத்திய தணிக்கை வாரியம் (Censor Board) சான்றிதழ் வழங்கிவிட்டதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், எவ்விதச் சிக்கலுமின்றி ‘திரௌபதி 2’ திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது…

Exit mobile version