Home செய்திகள் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு..?? பட்ஜெட் 2026 வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு..?? பட்ஜெட் 2026 வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!!

8-வது ஊதியக் குழு அமலாவதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பழமையான வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் சம்பளம் மற்றும் வரி கணக்கீட்டு முறையில் பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன.

குறிப்பாக, பழைய சட்டத்தில் பிரிவு 10, 16 மற்றும் 17-ன் கீழ் வழங்கப்பட்ட சம்பள விலக்குகள் அனைத்தும், புதிய சட்டத்தில் பிரிவு 19-ன் கீழ் ஒரே அட்டவணை அமைப்பில் கொண்டு வரப்பட உள்ளன. இது வரி செலுத்தும் முறையை எளிதாக்கும் என நம்பப்படுகிறது.ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்பான வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் விடுப்பு பயணப்படி (LTA) போன்ற சலுகைகள் புதிய சட்டத்தில் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவை அனைத்தும் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, வரி விலக்குகள் அளிக்கப்படலாம். இதன் மூலம் கையில் கிடைக்கும் சம்பளம் (Take home salary) கணிசமாக உயர வாய்ப்புள்ளது. அகவிலைப்படி (DA) அறிவிப்பு இல்லாமலே இந்தச் சம்பள மாற்றம் நிகழக்கூடும் என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பட்ஜெட் அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்…

Exit mobile version