Monday, March 2, 2026
No menu items!

உடல் ஆரோக்கியம் காக்க…!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்..!!

தற்போது மாறிவரும் காலநிலையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். உடலில் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. மருந்துகளைத் தேடி ஓடுவதை விட, அன்றாட உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகின்றன.

அதேபோல், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவை இயற்கையாகவே கிருமிகளை எதிர்ப்பதுடன், தொண்டை வலி மற்றும் உடல் அழற்சியைப் போக்கும் வல்லமை கொண்டவை.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக்க, புரோபயாடிக் நிறைந்த தயிர் சிறந்தது.

வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கீரைகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட கிரீன் டீ மற்றும் வைட்டமின் ஈ சத்து மிகுந்த பாதாம் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த 7 வகையான உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், எவ்வித நோய்த்தொற்றையும் எளிதில் எதிர்கொள்ளலாம்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News