தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) தலைவர் ஜி.கே. வாசன், வரவிருக்கும் தேர்தலில் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன், “வரும் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை என்பதை அவரது பேச்சு தெளிவுபடுத்தியுள்ளது.கட்சியின் தனித்துவத்தை நிலைநாட்டவும், தொண்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் கூட்டணி தர்மத்திற்காக வேறு சின்னங்களில் போட்டியிட வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால், இம்முறை கட்சியின் அடையாளமான தனி சின்னத்தை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கும் முன்பே, ஜி.கே. வாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது கூட்டணிக் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட மறைமுக நிபந்தனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு த.மா.கா தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது…

