Monday, March 2, 2026
No menu items!

விநாயகர் வழிபாடு..!! ஞாயிற்றுக்கிழமை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றுவதன் பயன்கள்..!!

மனித வாழ்வில் ஏற்படும் தொடர் கஷ்டங்களுக்கும், தடைகளுக்கும் ஜாதக ரீதியான தோஷங்கள் அல்லது பூர்வ ஜென்ம கர்ம வினைகளே முக்கியக் காரணமாக அமைகின்றன. நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை, மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவதன் மூலம் இத்தகைய கொடிய தோஷங்களை எளிதில் போக்க முடியும் என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வழிபாட்டு முறை: மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்திலோ, அல்லது காலை 7:45 முதல் 8:45 மணி வரையோ, மாலை 6:30 முதல் 7:30 மணி வரையோ இந்த வழிபாட்டைச் செய்யலாம். பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன் ஒரு தட்டில் அருகம்புல்லைப் பரப்பி, அதன் மீது அகல் விளக்கு வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, கிழக்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும்.

விநாயகருக்குப் பிடித்தமான நிவேதனத்தை வைத்துவிட்டு, தீபச் சுடரை நோக்கியவாறு “ஓம் கணேசாய நமஹ” என்ற மந்திரத்தை 54 முறை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும். விளக்கு குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்மைப் பிடித்துள்ள எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நீங்கி, வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News