தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சிலம்பரசன் (எ) சிம்பு. இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது ஊர் அறிந்த உண்மை. இந்நிலையில், அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘மங்காத்தா’ படத்தின் ரிலீஸின் போது நடந்த சுவாரஸ்யமான
சம்பவம் ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் வெளியான சமயத்தில், சிம்பு தனது சொந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார்.
இருப்பினும், தனது அபிமான நட்சத்திரமான அஜித்தின் 50-வது படம் என்பதால், ஆர்வத்தை அடக்க முடியாத சிம்பு, படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டுத் திரையரங்கிற்கு விரைந்துள்ளார். தற்போது வைரலாகும்
அந்த பழைய வீடியோவில், திரையரங்கம் முழுவதிலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, சிம்பு கூட்டத்திற்கு நடுவே உற்சாகமாகப் படம் பார்க்கச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் தனது காரிலிருந்து இறங்கி, ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தியேட்டருக்குள் நுழையும்
அந்த ‘த்ரோபேக்’ (Throwback) வீடியோ, சிம்பு மற்றும் அஜித் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு முன்னணி நடிகராக இருந்தும், ஒரு ரசிகனாகத் தனது அன்பை வெளிப்படுத்திய சிம்புவின் இந்தச் செயல், இரு தரப்பு ரசிகர்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
