Home சினிமா அப்படி மட்டும் பேசிடாதீங்க – “ஜனநாயகன்” விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மலேசியா அரசாங்கம்

அப்படி மட்டும் பேசிடாதீங்க – “ஜனநாயகன்” விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மலேசியா அரசாங்கம்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இருந்தாலும் சமீப காலமாக அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் விஜய் “ஜனநாயகன்” படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியிருந்தார் .இதனால் “ஜனநாயகன்” படத்திற்கு விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது .

இயக்குனர் எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பாபி ,பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள “ஜனநாயகன்” படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடக்க உள்ளது .இந்நிலையில் விஜய்க்கு சில கண்டிஷன்களை போட்டு உள்ளார்களாம் மலேசியா அரசு.

அது என்னவென்றால் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அரசியல் குறித்து எதுவும் பேசக்கூடாது என்றும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடியை கொண்டு வர அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளார்களாம்.இது விஜய் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது …

Exit mobile version