நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை (Censor) சான்றிதழ் தொடர்பான விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்தின் சென்சார் விவகாரத்தில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.இந்த மேல்முறையீட்டு மனு மீதான வாதப் பிரதிவாதங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், வரும் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இந்தத் தீர்ப்பு படக்குழுவினருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுமா அல்லது உறுதி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ள இத்தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என்பதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது…

