சென்னையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து பொதுமக்களையும், நகை பிரியர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இன்று (ஜனவரி 23) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.3,200 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.திருமண விசேஷங்கள் மற்றும் சுபகாரியங்கள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கத்தின் விலை ஒரு லட்சத்தைத் தாண்டி,
தற்போது 1.17 லட்சத்தையும் கடந்து செல்வது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வெள்ளி விலையும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது…
