Monday, March 2, 2026
No menu items!

பெண்களின் அழகைக் கெடுக்கும் கருவளையம்..!!வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்வது எப்படி.??

பெண்களின் முக அழகில் முக்கியப் பங்கு வகிப்பது அவர்களது கண்கள் தான். ஆனால், தற்போதைய சூழலில் வேலைப்பளு, தூக்கமின்மை மற்றும் சோர்வு காரணமாகப் பல பெண்களுக்குக் கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் தோன்றி, முகத்தின் பொலிவைக் குறைக்கின்றன. இந்தக் கருவளையங்களை நிரந்தரமாக நீக்க, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையான தீர்வு காண முடியும் என்று அழகுக்கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.இதற்குத் தேவையான முக்கியப் பொருட்களாகக் காபி தூள் (2 ஸ்பூன்), தேன் (1 ஸ்பூன்) மற்றும் தேங்காய் எண்ணெய் (1 ஸ்பூன்) ஆகியவை உள்ளன.

செய்முறையைப் பொறுத்தவரை, முதலில் முகத்தை நன்கு கழுவிய பிறகு, இரண்டு ஐஸ் கட்டிகளைக் கொண்டு கருவளையம் உள்ள பகுதியில் 5 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.பின்னர், ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள காபி தூள், தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நன்றாகக் குழைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைக் கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ள பகுதிகளில் பூசி,

சுமார் அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் நல்ல மாற்றம் தெரியும். இந்த எளிய வழிமுறையை வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால், கருவளையங்கள் நிரந்தரமாக மறைந்து கண்கள் பிரகாசமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை ரசாயனங்கள் இன்றி இயற்கையான முறையில் அழகை மீட்டெடுக்க இது ஒரு சிறந்த வழியாகும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News