நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்குப் பின்னால் பல்வேறு சகுனங்கள் இருப்பதாகக் காலம் காலமாக நம்பப்படுகிறது. அதில் முக்கியமானது கண் துடிப்பது. இது அறிவியல் ரீதியாகச் சோர்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டாலும், ஜோதிட ரீதியாக இதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. குறிப்பாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தப் பலன்கள் மாறுபடுகின்றன.ஆண்களைப் பொறுத்தவரை, வலது கண் துடிப்பது வெற்றிக்கான அறிகுறியாகும். இது தொழில் லாபம் மற்றும் நல்ல செய்தியைக் குறிக்கும்.
மாறாக, ஆண்களுக்கு இடது கண் துடித்தால் அது பண இழப்பு அல்லது கவலையின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு இது நேர்மாறானது. பெண்களுக்கு இடது கண் துடிப்பது மிகவும் மங்களகரமானது என்றும், அது பண வரவு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் என்றும் ஜோதிடம் கூறுகிறது. பெண்களுக்கு வலது கண் துடித்தால் அது மனவருத்தத்தைத் தரக்கூடும்.
மேலும், மேல் இமை துடித்தால் செல்வம் பெருகும் என்றும், புருவம் துடித்தால் உறவினர்கள் வருகை இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், அறிவியல் ரீதியாகப் பார்த்தால் மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக நேரம் மொபைல் பார்ப்பது போன்ற காரணங்களாலேயே கண்கள் துடிக்கின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இன்றும் சுவாரஸ்யமாகத் தொடர்கின்றன…
