Home அரசியல் “மோடி வந்ததும் சூரியன் மறைந்தது” – எடப்பாடி பழனிச்சாமி ஆனந்தம் ..!!

“மோடி வந்ததும் சூரியன் மறைந்தது” – எடப்பாடி பழனிச்சாமி ஆனந்தம் ..!!

மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் வருகை குறித்தும், நிலவும் அரசியல் சூழல் குறித்தும் சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார். மேடையில் அவர் பேசுகையில், “பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்த உடனே, இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது,” என்று குறிப்பிட்டார்.பொதுவாக ‘சூரியன்’ என்பது திமுகவின் தேர்தல் சின்னம் என்பதால், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் ஏற்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தாலும், மோடியின் வருகையால் திமுகவின் செல்வாக்கு குறையும் என்ற இரட்டை அர்த்தத்தில் அவர் மறைமுகமாகத் தாக்கியுள்ளதாகத் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.வரவிருக்கும் தேர்தல் களத்தில் அதிமுக – பாஜக கூட்டணியின் இணக்கம் மற்றும் வியூகங்களை வெளிப்படுத்தும் விதமாகவே எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் அவர் உதிர்த்த இந்த வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்கூட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியின் பேச்சை ஆரவாரத்துடன் வரவேற்றனர்…

Exit mobile version