முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் மற்றும் சூரியக் கதிர்வீச்சால் ஏற்படும் கருமை (Pigmentation) ஆகியவை முக அழகைப் பெரிதும் பாதிக்கின்றன. இதற்கு அதிக செலவு செய்யாமல், வீட்டில் உள்ள பீட்ரூட்டைப் பயன்படுத்தியே எளிதாகத் தீர்வு காண முடியும் என்று அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கு இரண்டு எளிய வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதல் முறையில், ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது தயிர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும். இதை வாரத்திற்கு 1-2 முறை செய்யலாம்.இரண்டாவது முறையில், பீட்ரூட் சாறுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
இதைத் தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் முகத்தில் ஸ்ப்ரே செய்து வந்தால், முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் இருக்கும். இயற்கையான முறையில் நிறத்தை அதிகரிக்கவும், கரும்புள்ளிகளை விரட்டவும் இது சிறந்த வழியாகும்…

