Monday, March 2, 2026
No menu items!

தமிழகத்திற்கு 11 ஆண்டுகளில் செய்தது என்ன.? மதுராந்தகத்தில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில் பேசிய பிரதமர்,

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆற்றியுள்ள பங்களிப்புகளைப் பட்டியலிட்டார். அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளில் வரலாறு காணாத வகையிலான பணிகளை நாங்கள் செய்துள்ளோம்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

தமிழகத்தின் உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களில் மத்திய அரசு காட்டி வரும் அக்கறையைச் சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் மற்றும் திட்டங்கள்

முந்தைய காலகட்டங்களை விட மிக அதிகம் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பிரதமருடன் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News